ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கான கையேடு: பணத்தை எங்கே முதலீடு செய்வது? ஒரு எளிய விளக்கம்
நம்மில் பலர் பணத்தை சம்பாதித்தாலும் , அதை எப்படிக் கையாள வேண்டும், எங்கே முதலீடு செய்ய வேண்டும் போன்ற குழப்பங்களை கொண்டிருக்கிறோம். "கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படிப் பெருக்குவது?" என்ற கேள்வி நம் மனதில் ஒரு முறையாவது தோன்றி இருக்கும். ஆரம்பநிலை முதலீட்டாளர்களுக்கும், எங்கே தொடங்குவது என்ற தயக்கம் உள்ளவர்களுக்குமான கட்டுரை இது முதலீடு என்றால் என்ன? முதலீடு (Investment) என்பது உங்கள் பணத்தை எதிர்காலத்தில் மேலும் பணம் ஈட்டும் நோக்குடன் ஒரு சொத்து அல்லது திட்டத்தில் போடுவதாகும். உதாரணமாக, வங்கி வைப்பு, பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவை முதலீடுகள்தான். ஏன் முதலீடு செய்ய வேண்டும்? நீங்கள் முதலீடு செய்வதன் முக்கிய காரணம், பணவீக்கம் (inflation) - உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைப்பதைத் தடுப்பதுதான். இன்று 100 ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பொருளை, ஒரு வருடம் கழித்து அதே 100 ரூபாய்க்கு வாங்க முடியாது. உங்கள் பணம் வளரவில்லை என்றால், காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். அதனால், எதிர்கால தேவைகளுக்கு உங்கள் பணம் போதுமானதாக இருக்க முதலீடு அவச...